Home
Overview
Technical Help

Select Unit > Unit 2: மாம்பழம் என்ன விலை? > Lesson 4:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test

    

Merchant: வாருங்கள் sir வாருங்கள். என்ன sir ரொம்ப நாளாகக் கடை பக்கம் ஆளையே காணோம்?

Customer: கொய்யாப்பழம் டஜன் எவ்வளவு?

Merchant:டஜன் அறுபது ரூபாய். ஐம்பத்தைந்து ரூபாய் போட்டு கொடுங்கள்.

C: கொய்யா பழத்துக்கு இவ்வளவு விலையா? சரி. நல்ல பழமாக ஒரு டஜன் கொடு.

M:இங்கே இருக்கிற எல்லா பழமும் நல்ல பழம்தான். நீங்களே எடுங்கள்.

C: இது நன்றாக இருக்கிறது.

M: sir அந்தப் பக்கம் எடுக்காதீர்கள்! இந்தப் பக்கம் எடுங்கள்.

C: ஏன்? இந்தப் பக்கம் என்ன?

M: அது ஊட்டிக் கொய்யா! விலை ஜாஸ்தி.

C: இது என்ன கொய்யா?

M: இது மதுரைக் கொய்யா?

C: ஊட்டி கொய்யா டஜன் என்ன விலை?

M: அது டஜன் எண்பது ரூபாய். உங்களுக்கு எழுபத்தைந்து ரூபாய்.

C: டஜன் அறுபது ரூபாய்க்குக் கொடு!

M: சார்! ரொம்ப பேரம் பேசாதீர்கள் சார். எழுபது ரூபாய் போட்டு கொடுங்கள்.

C: அப்படியா? சரி ஊட்டிக் கொய்யா ஒரு டஜனும் மதுரைக் கொய்யா ஒரு டஜனும் எனக்குக் கொடுத்துவிடு.

    Grammar Notes:

    Use of numbers: Cardinal numbers

    In Tamil, the cardinal numbers from one through ten are expressed with individual words. Numbers above ten are made by combining the adjectival (or oblique) form of a number with another number.
    Written FormSpoken FormMeaning
    ஒன்றுஒண்ணுOne
    இரண்டுரெண்டுtwo
    மூன்றுமூணுthree
    நான்குநாலுfour
    ஐந்துஅஞ்சுfive
    ஆறுஆறுsix
    ஏழுஏழுseven
    எட்டுஎட்டுeight
    ஒன்பதுஒம்போதுnine
    பத்துபத்துten

    In Tamil, the numbers 'nine', 'ninety', 'nine hundred' etc., are the "defective" forms of the succeding number. For example, ஒன்பது, nine, can be glossed as 'defective ten'; தொன்னூறு,ninety, is 'defective hundred' and so on.

    The numbers between ten and nineteen, with an exception of tweleve and nineteen are made by combining the adjectival form of பத்து, பதின் in written Tamil and பதி in some cases of spoken Tamil, with the other noun forms.
    Written FormSpoken FormMeaning
    பதினொன்றுபதினொண்ணுEleven
    பன்னிரண்டுபன்னெண்டுTwelve
    பதின்மூன்றுபதிமூணுThirteen
    பதிநான்குபதிநாலுFourteen
    பதினைந்துபதினஞ்சுFifteen
    பதினாறுபதினாறுSixteen
    பதினேழுபதினேழுSeventeen
    பதினெட்டுபதினெட்டுEighteen
    பத்தொன்பதுபத்தொம்போதுNineteen

    Cardinal numbers denoting the 'tens'

    Each of the numbers denoting the multiples of tens up to eighty are made combining the adjectival forms of the numbers one through nine(இரு, மு, நா, ஐம், அறு,எழு and எண்) with பது.
    Written FormSpoken FormMeaningAdjectival form
    இருபதுஇருபதுtwentyஇருபத்து-/இருபத்தி(sp)
    முப்பதுமுப்பதுthirtyமுப்பத்து-(முப்பத்தி)
    நாற்பதுநாப்பதுfortyநாற்பத்து-(நாப்பத்தி)
    ஐம்பதுஅம்பதுfiftyஐம்பத்து-(அம்பத்தி)
    அறுபதுஅறுபதுsixtyஅறுபத்து-(அறுபத்தி)
    எழுபதுஎழுபதுseventyஎழுபத்து-(எழுபத்தி)
    எண்பதுஎண்பதுeightyஎண்பத்து-(எண்பத்தி)

    As stated above, தொன்னூறு, ninety, is a 'defective' form of 'hundred.' The word தொள் means 'defective' and நூறு is 'hundred'.

    Numbers from 100 to 1000

    Like the tens, the hundreds are made with the adjectival form of each number along with the adjectival form of நூறு, நூற்று.

    இருனூறு > இருனூற்று- (written) > இருனூத்து (spoken)

    முன்னூறு > முன்னூற்று- (written) > முன்னூத்து spoken) and so on.

    The number for nine hundred is தொள்ளாயிரம், or 'defective thousand' (ஆயிரம்).

    However, the multiples of a thousand do not take the adjectival form, instead they occur with the noun form of the number: இரண்டாயிரம் (two thousand), மூன்றாயிரம் (optionally, மூவாயிரம்) (three thousand) and so on.

    Numbers added to the thousands are made with the adjectival form of 'thousand' which is: ஆயிரத்து (written) and ஆயிரத்தி (spoken).

    Lakh and Crore

    One hundred thousand is called லட்சம் (a lakh), and one hundred லட்சம் (10 million) is called கோடி, which means 'crore'. The adjectival form of லட்சம் is லட்சத்து and கோடி is கோடியே.

    Example: ஒரு லட்சத்து ஐந்து 'one lakh and five' (100,005)
    ஒரு கோடியே ஐம்பது லட்சம் 'one crore and fifty lakh' (15,000,000)

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு '1984'

    இரண்டாயிரத்து நான்கு '2004'

    Write the following numbers in written Tamil:
    19, 28, 52, 68, 95, 92, 100, 128, 180, 195, 200, 223, 290, 890, 923, 1000, 1023, 1254, 1978, 1989, 1960, 2000, 2044, 2020

    Write your home number, telephone number and year of your birth!
    Dialogue: With a washerman: unit_05/section_C/lesson01.html

    In a vegetable store: unit_03/section_C/lesson01.html

    Cultural Notes:

    Bargaining (பேரம் பேசு)

    Bargaining for anything from vegetables to auto-rickshaws is a common practice in Tamil culture. There is a saying in Tamil வாயுள்ள பிள்ளை பிழைக்கும் meaning 'a talkative person will make out very well' (lit. 'the child with mouth would survive'), which reflects very well the idea of bargaining in stores. Both the store owner as well as the customers tend to engage actively during the process of bargaining. The customers usually start with half of the asking price (பாதி விலை, 'half-price') and both parties attempt to adjust the scale steadily until they come to an agreeable price.

    Especially with foreigners, sellers will attempt to get the highest price they can. It is always a good idea to ask a Tamil who isn't involved in the transaction what a good price would be. There are no specific patterns of speech in the discourse of bargaining, but one has to use the language as well as the general knowledge about the market in order to purchase things cheap.

    Begin with a pleasing tone of voice, and end with a rough tone of voice:

    Both parties normally start with buttering each other up with customary phrases like: நான் பெரும்பாலும் உங்கக் கடெயிலெதான் வாங்குவேன் 'I mostly buy only in your store', உங்கக் கடையிலெ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் 'everything is very good in your store'; உங்களுக்காகத்தான் நான் வெலெயெ கொறெக்கிறேன் 'I reduce the price just for you', எங்களுக்கு உங்களெப்போல வாடிக்கையாளர்தான் வேணும் 'we require only customers like you' etc. By the end though, the mood will be somewhat rougher than in the beginning, with expressions like இவ்வளவுதான் என்னாலெ கொடுக்கமுடியும். இதுக்கு மேலெ ஒரு பைசா கொடுக்க முடியாது 'This is what I can afford, and can't pay even a cent more than this', இப்படியெல்லாம் வெலெயெச் சொன்னா, நான் வேற கடையிலெதான் வங்கவேண்டியிருக்கும் 'if the price is this way, I will have to make my purchases in other stores now onwards'; இதுதான் கடைசி வெலெ. இதுக்கு மேலெ ஒரு பைசா கூட கொறெக்க முடியாது. 'this is the final price and I can't reduce even a cent on this', இதுதான் கடைசி வெலெ. இந்த வெலெக்கி வாங்குனா வாங்குங்க இல்லேண்ணா போங்க! 'this is the last price. Buy it for this price, otherwise leave!'.

    Below are some of the conversations one would normally hear in stores during the course of bargaining.

    Customer's point of view:

    பக்கத்துக் கடையிலெ கொறைக்கச் சொன்னா ஒடனே கொறெப்பாங்க! நீங்களும் கொறெச்சிக் கொடுங்க
    The neighboring stores usually make a good deal when asked, why don't you also reduce the price?

    அடே அப்பா! என்ன இவ்வளவு அதிகமா வெலெயெச் சொல்லுறீங்க?
    Gosh! your price is outrageously expensive!

    உங்க கடெயிலெ எப்பவும் வெலெ கொறெச்சலா இருக்கும்ணு வந்தா, என்ன இவ்வளவு அதிகமா வெலெயெ சொல்லுறீங்க!
    We came to your store thinking you usually sell things at a cheaper price, but your are giving us a very expensive price!

    Store owner's point of view:

    வெலெவாசியெல்லாம் ரொம்ப ஏறிடுச்சி. கொறெக்கிறது ரொம்பக் கஷ்டம்.
    Everything in the market is very expensive these days, and it would be very difficult for us to reduce the price.

    மழெயே பெய்ய மாட்டேங்குது! காய்கறியெல்லாம் சரியாவே வெளெயலெ!
    There has been hardly any rain! The vegetables didn't grow as expected!

    உங்களுக்காகத்தான் இந்த வெலெ! மத்தவங்களுக்கெல்லாம் கொஞ்சம் அதிகமாத்தான் விப்போம்!
    This price is fixed just for you, and for others it will be little bit more expensive.

© South Asia Language Resource Center (SALRC)